திருப்பூர், அக். 10: திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் புகையிலை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. சப்- கலெக்டர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட சுகாதார அதிகாரி ஜெயந்தி மற்றும் மாநகராட்சி டாக்டர் கலைச்செல்வன், பல்லடம் வட்டார மருத்துவ அதிகாரி சுடர்விழி, டாக்டர் பாபு சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எல்.ஆர்.ஜி. கல்லூரி வரை சென்றடைந்தது.
இதில் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைளுடன் மாணவ, மாணவிகள் அணிவகுத்து வந்தனர்.