அவிநாசி, அக். 7: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் பதிவுபெற்ற சோலார் வெண்டார்ஸ் மற்றும் வங்கி அலுவலர்கள் பங்குபெறும் மின் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் முகாம் அவிநாசி அருகே பெருமாநல்லூர் பாலசமுத்திரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட மேற்பார்வையாளர் பொறியாளர் சுமதி தலைமை தாங்கினார். கோட்ட செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன், குன்னத்தூர் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார், ஊத்துக்குளி உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும், அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும், கூடுதல் ஆவணமின்றி, மின் கட்டண ரசீது மட்டுமே பதிவேற்றம் செய்து, இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் மற்றும் சோலார் அமைப்புகள், வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement