Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ரதம்

திருப்பூர், நவ. 28: திருப்பூர் மாவட்ட குடும்பநல செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தினை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி இருவார விழா கடந்த 21ம் தேதி தொடங்கியது. இது வருகிற 4ம் தேதி வரை நடக்கிறது. அந்த வகையில் விழிப்புணர்வு ரதம் தொடங்கி வைக்கப்பட்டது. குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான கனவு குடும்ப நலத்தில்ஆண்கள் பங்கேற்றால் மட்டுமே நனவு என்ற விழிப்புணர்வு ரதம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நகர்வலம் வரவுள்ளது.

மேலும், ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி விளக்க கையேடு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இருவார விழாவினை முன்னிட்டு ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன. குடும்பநல அறுவை சிகிச்சை ஏற்கும் ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1100, அன்பளிப்பு தொகை ரூ.1000 மற்றும் தனியார் ரோட்டரி கிளப் வழங்கும் அன்பளிப்பு தொகை ரூ.1000 என மொத்தம் ரூ.3100 வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (குடும்பநலம்) கௌரி, முதல்வர் (திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை) மனோன்மணி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மீரா, மாவட்ட குடும்ப நலச்செயலக மாவட்ட விரிவாக்க கல்வியாளர்கள் ராணி, சார்லஸ் ராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.