திருப்பூர், நவ. 28: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி சிறப்புத் தீவிர திருத்தம் 2026 திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கி அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வாக்காளர்களிடமிருந்து இந்த கணக்கீட்டு படிவத்தை திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது.வாக்காளர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் சுலபமாக இந்த கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க ஏதுவாக உங்கள் பகுதியிலேயே நேரடியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவத்தை திரும்ப பெற்றுக் கொள்வார்கள். வாக்காளர் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற 4ம் தேதி ஆகும்.இறுதி நாள் வரை காத்திருக்காமால் ஓரிரு தினங்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைத்து வாக்காளர்களும் சிறப்புத் தீவிர திருத்தம் 2026 பணிகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

