Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இஎஸ்ஐ சார்பில் பயனாளிக்கு ஓய்வூதிய ஆணை

திருப்பூர், நவ. 27: கோவை அன்னூர் தனியார் நிறுவனத்தில் ராமசுந்தரம் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 02.02.2025 அன்று இயந்திரத்தை இயக்கும்போது விபத்துக்குள்ளாளார். இதனால் அவரது வலது ஆள்காட்டி விரவில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து வேலை காரணமாக ஏற்பட்ட விபத்தாக கருதப்பட்டு இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் மாத ஓய்வூதியம் ரூ.1,758 என நிர்ணயிக்கப்பட்டது.

திருப்பூரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ கே.என்.பி. புரம் கிளை அலுவலகத்தில் கீழ்க்கண்ட நிரந்தர உடல் ஊன உதவித்தொகையும், பணம் வழங்கும் ஆணையும் வழங்கப்பட்டது. இ.எஸ்.ஐ கோவை சார் மண்டல அலுவலகத்தின் இணை இயக்குநர் (பொ) கே.ஆர்.ரவிக்குமார் ஆணைப்படி, துணை இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் கே.என்.பி. புரம் கிளை மேலாளர் மகேஷ்குமார் ஆகியோர் நிரந்தரமான ஓய்வூதிய ஆணை மற்றும் ரூ.13,652 மதிப்புள்ள காசோலை காப்பீடு செய்யப்பட்ட நபரான ராமசுந்தரத்திற்கு வழங்கினார்.

இதுபோல் திருப்பூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து 22.01.2025 அன்று பணியின் போது மறைந்த பரமசிவன் மாதாந்திர ஓய்வூதிய ஆணை கொடுக்கப்பட்டது. இ.எஸ்.ஐ. கோலை சார் மண்டல அலுவலகத்தின் இணை இயக்குநர் (பொ) கே.ஆர்.ரவிக்குமார் ஆணைப்படி துணை இயக்குனர் மா.கார்த்திகேயன் மற்றும் கே.என்.பி. புரம் கிளை மேலாளர் மகேஷ்குமார் ரூ.60,399 மதிப்புள்ள காசோலையை காப்பீடு செய்யப்பட்ட நபரின் குடும்பத்திற்கு வழங்கினார்.