திருப்பூர், நவ.27: திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், தமிழ்நாடு அரசு மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் திருப்பூரில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு திருப்பூரில் புத்தகத்திருவிழா நடத்துவது தொடர்பாக பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பில் ஆலோசனை கூட்டம் மங்கலம் சாலை கே.ஆர்.சி சிட்டி சென்டரில் நடைபெற்றது.
அரிமா மு.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருப்பூர் காங்கேயம் சாலை வேலன் ஓட்டல் மைதானத்தில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து நடத்துவது எனவும், அதற்கான ஏற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பின்னல் புக் ட்ரஸ்ட் நிர்வாகிகள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


