அவிநாசி, டிச.11: அவிநாசி அருகே குன்னத்துார், ஆலம்பாளையம் பகுதியை சேர்ந்த கந்தன் மனைவி கல்யாணி (45). இவரது மளிகை கடையில் குட்கா விற்பனை நடைபெற்று வருவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இளங்கோவன் மற்றும் குன்னத்தூர் போலீசார் கல்யாணியின் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் மளிகைகடைக்கு சீல் வைத்தனர்.
+
Advertisement


