திருப்பூர், அக்.31: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) உடுமலை வடபூதிநத்தம், ஆர் வேலுர் ஊராட்சிகளுக்கு பெரியவாளவாடி அரிமா சங்க திருமண மண்டபம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் புதுர்பள்ளம்பாளையம் ஊராட்சிக்கு கஸ்துரிபாளையம் புதுகாலனி சமுதாய நல கூடம், திருமுருகன்பூண்டி நகராட்சி வார்டு எண் 16, 19, 20, 21, 23 முதல் 27 வரை திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் அம்மன் மண்டபத்திலும் நடக்கிறது. இதில் கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement 
 
  
  
  
   
