உடுமலை, அக்.31: திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் உடுமலை அருகேயுள்ள சின்னவீரம்பட்டியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தனசேகர், மகாலிங்கம், உடுமலை நகராட்சி தலைவர் மத்தீன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், மாவட்ட விவசாய அமைப்பாளர் ரகுபதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நவீன் மற்றும் திமுக அணியின் அமைப்பாளர்கள், மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் துணை அமைப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement 
 
  
  
  
   
