திருப்பூர், அக். 30: திருப்பூர் மாவட்டத்தில் 6 துணை தாசில்தார்கள் நிர்வாக நலன் கருதி பணிமாறுதல் மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக தலைமை உதவியாளா் பிரபு, பல்லடம் வட்ட வழங்கல் அலுவலராகவும், பல்லடம் வட்ட வழங்கல் அலுவலா் பால விக்னேஷ், திருப்பூர் தெற்கு தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், பல்லடம் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் பிரகாஷ், திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலக தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.
இதுபோல் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலக தலைமை உதவியாளா் மகேஸ்வரி, ஊத்துக்குளி வட்ட வழங்கல் அதிகாரியாகவும், ஊத்துக்குளி வட்ட வழங்கல் அதிகாரி கீர்த்திபிரபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக தலைமை உதவியாளராகவும், மாவட்ட வழங்கல் கண்காணிப்பாளா் பிரேமலதா கலெக்டா் அலுவலக சமுக பாதுகாப்பு திட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
