திருப்பூர்,அக்.30: திருப்பூர் அருகே கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், மங்கலம் ரோடு, செங்குந்தபுரம், 7வது வீதியில் ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள்.
இந்நிலையில், அந்த கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் ஒருவர் மதுபோதையில் கோயிலில் தொழுகை நடத்துவது போல் செய்தார். இது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் மத்திய போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பூச்சக்காடு பகுதியை சேர்ந்த அஜ்மல் கான் (20), என்பவரை கைது செய்தனர்.
