திருப்பூர், ஆக.30: கோவையை சேர்ந்தவர் சரவணன் (43), இவர் திருப்பூர் காந்தி நகரில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை வழக்கம் போல் பேக்கரி திறந்து வியாபாரத்தை தொடங்கினர். அப்போது பேக்கரியில் டீ பாய்லரில் தண்ணீர் சூட வைத்துள்ளனர். இதனை மறந்து டீ மாஸ்டர் குளிக்க சென்றதாக தெரிகிறது. அந்த நேரத்தில் திடீரென தீ பற்றியது. தீ மளமளவென பேக்கரி முழுவதும் பரவியது.
தகவல் அறிந்து வந்த வடக்கு தீயணைப்பு துறையினர் பேக்கரிக்குள் இருந்த இரண்டு சிலிண்டர்களை முதலில் மீட்டனர். தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான பொருட்கள் சேதமடைந்தது. இந்த தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.