திருப்பூர், ஆக.29: திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் பலரும் மழையில் நனைந்தபடி சென்றனர். இதுபோல், காலையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவிகள் மற்றும் அலுவலகத்திற்கு சென்றவர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.