தாராபுரம், ஆக.29: தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி, ராமமூர்த்தி நகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் ராமலிங்கம் தலைமையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முகாமினை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து முகாமில் பெறப்பட்ட ஒரு சில மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, துணைத்தலைவர் துரைசாமி, ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.