வெள்ளக்கோவில், ஆக. 27: வெள்ளக்கோவிலில் பொது சுகாதாரத்துறை உணவு பாதுகாப்பு துறை காவல் துறை மற்றும் வெள்ளகோவில் நகராட்சி துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் இணைந்து புகையிலை தடுப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் பள்ளிகள் பேருந்து நிலையங்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட சிகரெட், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கலப்படமாக முறையில் உபயோகிக்கப்பட்ட டீ தூள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறல் செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் 32 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 கிலோ கலப்பட டீ தூள் கொட்டி அழிக்கப்பட்டது.
இந்த கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர் கதிரவன் மற்றும் வேல்முருகன் காவல்துறை உதவி ஆய்வாளர் முகமது இஸ்மாயில் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பாலசுப்பிரமணியம் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.