திருப்பூர், ஆக.27: திருப்பூர், நல்லூரை சேர்ந்தவர் காதர் ஒலி (28), இவர் பனியன் நிறுவன தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காத்திருப்போர் அறையில் படுத்திருந்தார். அப்போது, காதர் ஒலியின் செல்போன் சட்டைப்பையில் இருந்து கீழே விழுந்துள்ளது.
அதனை அரசு மருத்துவமனை காவலாளி மணிகண்டன் (34), திருடியுள்ளார். தொடர்ந்து செல்போன் காணாதது குறித்து காதர் ஒலி புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.