திருப்பூர், அக். 24: வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மழைக்காலங்களில் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் 4 மண்டலங்களுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதனை மேயர் தினேஷ்குமார், கமிஷனர் அமித் ஆகியோர் வழங்கினர்.
இதில் துணை ஆணையாளர் சுந்தரராஜன், செயற்பொறியாளர் (பொ) ஹரி, உதவி செயற்பொறியாளர்(பொ) ராம்மோகன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மரம் அறுக்கும் இயந்திரம், நீர் அகற்றும் பம்ப் செட் ஜெனரேட்டர், 135 கம்பி இல்லாத தொலைத்தொடர்பு உபகரணங்கள் பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டது.


