திருப்பூர், ஆக. 22: திருப்பூர் கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் முறைகேடாக சிலிண்டர்கள் விற்பனை நடைபெறுவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் பறக்கும் படை தனித்தாசில்தார் ராகவி தலைமையிலான குழுவினர் அந்தப் பகுதியில் நேற்று காலை ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு குடோன் பகுதியில் விற்பனைக்கு பதுக்கிய 51 சிலிண்டர்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் 51 சிலிண்டர்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.