திருப்பூர், ஆக. 22: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே.விக்னேஷ்மாது முன்னிலையில் சிறைவாசிகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு கோவை மத்திய சிறை, திருப்பூர் மாவட்ட சிறை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, பல்லடம், தாராபுரம் மற்றும் உடுமலை கிளைச்சிறை ஆகிய இடங்களில் மொத்தம் 6 அமர்வுகளாக நடைபெற்றது.
இதில் மொத்தம் 40 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 23 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு 14 சிறைவாசிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.நீதித்துறை நடுவர் செந்தில்ராஜா, நதியா பாத்திமா, தனலட்சுமி, விஜயலட்சுமி, ஷப்னா, தேன்மொழி, தரணிதர், உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டு வழக்குகளை விசாரித்து சமரச தீர்வு கண்டனர்.