திருப்பூர், செப்.19:திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் நேற்று நடந்த கல்லூரி கலை திருவிழாவில் தற்காப்பு கலை பிரிவில் டேக்வாண்டோ மற்றும் சிலம்பப் போட்டிகள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தமிழ்மலர்(பொ) தலைமை வகித்தார். டேக்வாண்டோ போட்டியில் 6 பிரிவுகளில் 15 மாணவிகளும், சிலம்பப் போட்டியில் 3 பிரிவுகளில் 7 மாணவிகளும் பங்கேற்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் சிறப்பு அழைப்பாளராக உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் பங்கேற்றார். நடுவர்களாக பாலகிருஷ்ணன், முரளி, சரவணகுமார், மாலினி ஆகியோர் செயல்பட்டனர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் (பொ) உஷா போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.