திருப்பூர், செப்.18: திருப்பூர், ஊத்துக்குளி இரட்டைக்கிணறு பகுதியில் உள்ள தேங்காய் களத்தில் இருந்து, தேங்காய் தொட்டிகளை ஏற்றிச் செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை கோவில்பட்டியை சேர்ந்த கார்த்தி (36), என்பவர் ஓட்டிவந்தார். பின்னர் லாரியை களத்தில் நிறுத்தி விட்டு, கிளீனர் சீட்டில் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, கார்த்தி திடீரென மயக்கமடைந்து லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த கார்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கார்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.