Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வீட்டுமனை பட்டா வழங்க திமுக நிர்வாகி கோரிக்கை

பல்லடம், அக். 16: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளர் சிவக்குமார் தலைமையில் இச்சிப்பட்டி ஊராட்சி கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: இச்சிப்பட்டி ஊராட்சியில் 250 குடும்பங்களுக்கு மேல் வீடு இல்லாமல் உள்ளனர்.

இதற்கிடையில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க 68 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. ஏற்கனவே 2021-ம் ஆண்டு 110 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் பட்டா வழங்கவில்லை. எனவே தேர்வான பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.