திருப்பூர்,செப்.15:திருப்பூர், நெருப்பெரிச்சல் அடுத்த சமத்துவபுரத்தை சேர்ந்தவர் நந்தினி (28). இவரது கணவர் சுனிஷ் (30). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சுனிஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து நந்தினி குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்தார்.அப்போது அங்கேரிபாளையம் வெங்கமேட்டை சேர்ந்த பிரதீப் (எ) பிரவீன் (25) தனக்கு யாரும் இல்லை எனவும், தனிமையில் வசிப்பதாக கூறியும் நந்தினியை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நந்தினி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் பிரவீனுக்கு தாய் இருப்பதை அறிந்த நந்தினி, மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பிரவீன் தாய் நந்தினியை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிரவீனும் நந்தினியை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார். இது குறித்து நந்தினி வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் (எ) பிரவீனை கைது செய்தனர்.