உடுமலை, நவ. 13: துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு குடிமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள வாகத்தொழுவு ஊராட்சி வி.வேலூர் கிராமத்தில் திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியம் தலைமையில் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணிகடவு கிரி, பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேலூர் சிவப்பிரகாஷ், திருநாவுக்கரசு, குடிமங்கலம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணி, தகவல் தொழில்நுட்ப அணி சம்பத்குமார், ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் குமார், ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் வினோத் மற்றும் இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.
