திருப்பூர்,செப்.13: சென்னையை சேர்ந்தவர் ராஜவேல் (23). இவர் திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் ராஜவேல் தனது தந்தைக்கு செல்போன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். ஆனால் போதிய பணம் இல்லாததால் செல்போன் வாங்கித் தர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த ராஜவேல் கடந்த 5ம் தேதி விடுதியின் அறையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பெற்ற ராஜவேல் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.