உடுமலை, செப்.13: உடுமலை பைனான்சியர்ஸ் அசோசியேசன் சார்பில், உடுமலை காவல் நிலையத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உடுமலை பகுதியில் வாகனங்களை எவ்வித ஆவணமும் இன்றி அடமானம் பெறும் நபர்கள் உள்ளனர். இவர்கள் எங்கள் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்ற வாகனங்களுக்கு சட்டத்துக்கு புறம்பான வகையில், சிறு தொகை கொடுத்து அடமானத்துக்கு எடுத்து, வாகனங்களை சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் நபர்களுக்கு கொடுத்து விடுகின்றனர்.
எங்களிடம் கடன் பெற்ற நபர்களை தேடிச் செல்லும்போது அவர்களிடம் வாகனங்கள் இருப்பதில்லை. அவர்கள் தவணையும் கட்டுவதில்லை. இத்தகைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். உடுமலை காவல் ஆய்வாளரை சந்தித்து இந்த மனுவை அளித்தனர்.