உடுமலை, செப். 12: உடுமலை மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உடுமலை கோட்டம் காந்தி நகர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட ஸ்ரீராம்நகர் பகிர்மான மின் இணைப்புகளில் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களினால் செப்டம்பர் மாத மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே, இப்பகுதி மின்நுகர்வோர் ஜூலை மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே செப்டம்பர் மாதத்துக்கும் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
+
Advertisement