திருப்பூர், செப்.12: திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2018ம் ஆண்டு டூவீலர் திருட்டு வழக்கில் திருநெல்வேலியை சேர்ந்த ரசூல் மொய்தீன் (எ)மொய்தீன் (49) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஜூடீசியல் மாஜிஸ்ட்ரேட் எண்-2ல் நடைபெற்று வந்தது. ரசூல் மொய்தீன் வழக்கிற்கு ஆஜராகாமல் இருந்ததால் கடந்த 2019ல் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரசூல் மொய்தீனை போலீசார் பிடித்து கடந்த 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் ரசூல் மெய்தீனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்ட்ரேட் செந்தில்ராஜா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கவிதா ஆஜராகி வாதாடினார்.