உடுமலை, செப். 10: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உடுமலை ஒன்றிய கமிட்டி சார்பில் ஜல்லிப்பட்டியில் நேற்று முன்தினம் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும், ஜல்லிப்பட்டியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள அரசு மருத்துவமனையை திறக்க வேண்டும், போதிய மருத்துவர், செவிலியரை நியமிக்க வேண்டும், ஜல்லிப்பட்டி ஊராட்சியில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் ஒன்றிய தலைவர் சங்கீதா தலைமை வகித்தார். லாவண்யா, பவானி, நாகரத்தினம், மாரியம்மாள், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டனர்.
+
Advertisement