திருப்பூர், செப். 10: திருப்பூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்க பணியாளா்களின் குறை தீர்ப்பு முகாம் வரும் 12ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டா் அலுவலக வளாகத்தில் உள்ள 4ம் தளத்தில் அறை எண் 407ல் அமைந்துள்ள திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில், திருப்பூர் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற, பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பணியாளா்கள், தங்கள் குறைகள் தொடா்பான விண்ணப்பங்களை வழங்கலாம். இந்த கோரிக்கை விண்ணப்பங்கள் உரிய சட்ட விதிகள், அரசாணை மற்றும் பதிவாளா் கடிதங்கள் சுற்றறிக்கைக்கு உட்டுபட்டு உடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.