திருப்பூரில் உள்நாட்டு உற்பத்தியில் ஜாப்ஒர்க் முறையில் சுமார் 19,000 வீடுகளில் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர்.ஆனால் அவர்களுக்கு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்குவது போன்ற ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுவதில்லை. ஆனால் அவர்களும் முழுநேரம் பணியாற்றி திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றக்கூடிய நிலையில் அவர்களுக்கும் ஊதிய உயர்வு, இஎஸ்ஐ, பிஎப், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட இதர சலுகைகளை வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.