அவிநாசி, அக். 9: அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உள்ள ஏல மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு, மொத்தம் 118.82 குவிண்டால் எடையுள்ள 385 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில், ஆர்.சி.எச். பி.டி.ரக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7989 வரையிலும், கொட்டு ரக (மட்ட ரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 முதல் ரூ.3800 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்து 55 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
ஆத்தூர், அந்தியூர், அவிநாசி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 71 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து 7 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர். செவ்வாய்க்கிழமை தோறும் சேவூரில் உள்ள ஏல மையத்தில் வாழைக்காய் ஏலமும் தொடர்ந்து நடைபெற உள்ளதாக அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் காவ்யா தெரிவித்துள்ளார்.