வெள்ளகோவில், அக். 9: வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.59.96 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளகோவில், வாணியம்பாடி, சிவகிரி, எரசனம்பாளையம், திருச்சி லாலாபேட்டை, கருங்கல்பாளையம், மார்க்கம்பட்டி, அரியலூர், முத்தூர் பகுதி விவசாயிகள் 73 பேர், 29 ஆயிரம் கிலோ கொப்பரையை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் முன்னிடையில் நடைபெற்ற ஏலத்தில் தரமான முதல்தர கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.227.06க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.145.49க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.59 லட்சத்து 96 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.