திருப்பூர், செப். 9: திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காயத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழிலாளர்துறை அதிகாரிகள் கடந்த மாதம் பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்தனர். இதில், எடையளவு சட்டத்தின் கீழ் ஆய்வுகள் செய்யப்பட்ட போது, குறைவு, முத்திரை, மறுமுத்திரை இடப்படாத எடை அளவுகள் வைத்திருத்தல் உள்பட 23 முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், தரப்படுத்தப்படாத அலகில் எடைகள் மற்றும் அளவுகளில் அறிவிப்பு விலைப்பட்டியல் தொடா்பாக 1 முரண்பாடு கண்டறியப்பட்டு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக தொழிலாளா் நல சட்டங்களை மீறிய 130 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.