உடுமலை, செப்.9: உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். இயற்பியல் ஆசிரியர் கணேச பாண்டியன் வரவேற்றார். திருப்பூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் இயற்கையை நேசிக்க மரம் நடுவோம் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பள்ளி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகளால் 15 மரக்கன்றுகள் நடப்பட்டன. முதுகலை வேதியியல் ஆசிரியர் ஜெகநாத ஆழ்வார் சாமி நன்றி கூறினார். நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் தேர்வு அறைகள் மற்றும் வகுப்பறை வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.