உடுமலை, செப்.9: உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகோட்டை ஊராட்சியில் திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. திமுக அரசின் சாதனைகளை விளக்கி தலைமை கழக பேச்சாளர் குடுகுடுப்பை கோவிந்தன் பெரியகோட்டை ஊராட்சி மாரியம்மன் நகர், காமராஜ் நகர், யுகேபி நகர் போன்ற பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை உடுக்கை அடித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மெய்ஞானமூர்த்தி ஏற்பாட்டில் முன்னாள் ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் கலந்து கொண்டு அந்த பகுதியில் உள்ள வீடுகள்தோறும் துண்டு பிரசுரம் வழங்கி பிரசார பணிகளை மேற்கொண்டுள்ளனர்.