திருப்பூர், அக். 8: உச்ச நீதிமன்றத்தில் பணிகள் நடைபெற்ற போதே தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீசிய வழக்கறிஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலச்செயலாளர் வழக்கறிஞர் மணவாளன் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் பொன்ராம், திமுக வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பார்த்திபன், மதிமுக வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் கந்தசாமி, அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட பொருளாளர் உதயசூரியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் தமயந்தி நன்றி கூறினார். இதில், திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.