அவிநாசி, அக். 8: அவிநாசி அருகே விவசாயிகள் ஸ்தூபி அருகே பெருமாநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ கூல் லிப், 93 கிலோ ஹான்ஸ், 80 கிலோ பான்மசாலா, 18 கிலோ புகையிலை உள்ளிட்ட 208 கிலோ புகையிலை பொருட்கள் சாக்கு பைகளில் இருந்தது.
இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, காரில் வந்த திருப்பூர் குமாரனந்தபுரத்தை சேர்ந்த நந்தகுமாரை (27) கைது செய்தனர். பின்னர் அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.