பல்லடம், நவ.7: பல்லடம் ஒன்றியம் மாணிக்காபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. இதில் பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஒருவருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்வில் பல்லடம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் துரைமுருகன், ஒன்றிய பொருளாளர் குமார், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் ராஜேஸ்வரன், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், பல்லடம் அரசு கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
