காங்கயம், நவ. 7: காங்கயம் படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார், பேரணிக்கு தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை லிங்கேஸ்வரி முன்னிலை வகித்தார்.
மருத்துவ அலுவலர் சரண்யா, மாவட்ட தலைமை மருத்துவமனை சுகவாழ்வு மைய ஆலோசகர் கருப்புசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணி, படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பேருந்து நிலையம் வழியாக படியூர் ஊருக்குள் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. பேரணியின்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
