அவிநாசி, நவ. 7: அவிநாசி வட்டம், கைகாட்டிப்புதூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இல்லத்திற்கு சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான மனிஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அவிநாசிலிங்கம்பாளையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வீடுவீடாக சென்று கணக்கெடுக்கும் பணி மற்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணிகள் தொடர்பான மகளிர் சுயஉதவி குழுவிற்கான பயிற்சி கூட்டத்தில் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில், அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
