திருப்பூர், நவ. 6: திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காயத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் பல்வேறு தொழிலாளர் நல சட்டங்களின் கீழ் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் எடையளவு சட்டத்தின் கீழ் எடை குறைவு, முத்திரை, மறுமுத்திரை இடாத எடை அளவுகள் வைத்திருத்தல் போன்ற பிரிவின் கீழ் 34 கடைகளும், பதிவு சான்று பெறாத 6 கடைகளும், தொழிலாளர்கள் சட்டங்களை மீறிய 103 நிறுவனங்கள் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 3 நிறுவனங்கள் என மொத்தம் 146 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 630 வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
+
Advertisement
