திருப்பூர், நவ. 6: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 14 குறு மையங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது. வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில் 7 அணிகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதேபோல் 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 7 அணிகள் கலந்துகொள்ளும் இந்த போட்டிகளில் முதலிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்ய உள்ளனர்.
