திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 4வது குடிநீர் திட்டத்திலிருந்து மாநகருக்கு குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இக்குடிநீர் திட்ட பிரதான குடிநீர் குழாய் பாதையில் சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் குழாய் பாதையில் பொருத்தப்பட்ட வால்வுகள் மாற்றி அமைக்கும் சீரமைப்பு பணிக்காக வருகிற 3ம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
ஆதலால், மாநகரத்தில் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் வராது. எனவே, மாநகரில் குடிநீர் பெறப்படும் அளவு குறைவதால் குறித்த கால இடைவெளியில் குடிநீர் விநியோகிக்க இயலாது. ஆகவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அமித் கூறியுள்ளார்.