அவிநாசி, ஜூலை 31: அவிநாசி தாலுகா அலுவலகம் முன் சாலையோரம் இருந்த மரக்கிளை, முட்புதர், சுற்றுச்சுவர் அருகில் இருந்த இரும்பு கம்பிவேலி துப்புரவு பணியாளர்கள் மூலமாக அகற்றப்பட்டது. நகராட்சி ஆணையாளர் வெங்கடேசுவரன் உத்தரவின்பேரில், சேவூர் ரோட்டில் அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர போஸ்டர்களை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றினர்.
அவிநாசி நகராட்சி அலுவலகம் முதல் தாலூகா அலுவலகம், நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் ரோட்டோரமாக போடப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அறிவுறுத்தினார். அப்போது அவருடன் அவிநாசி நகராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சிவசங்கர், கோமதி, மற்றும் தூய்மை பணியாளர் மாதையன் ஆகியோர் உடனிருந்தனர்.