திருப்பூர், ஜூலை 30: அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சேலம் மையத்தின் சார்பாக, திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவத்துறையில் பணியாற்றும் செவிலியா்களுக்கு 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி கலெக்டா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று பயிற்சி தொடங்கியது. இதனை துணை கலெக்டர் மாறன் தொடங்கி வைத்தார். உதவி கணக்கு அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர். சம்சத் பானு, அருள்குமார் ஆகியோர் புத்தாக்க பயிற்சி வழங்கினர். இதில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.
+
Advertisement