Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை, தேங்காய், மக்காச்சோளம் ஏலம்

உடுமலை, ஆக. 2: உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு ஏலம் (இ-நாம்) நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கூறியதாவது:தேங்காய் பருப்பு (கொப்பரை) 131 மூட்டைகளை 19 விவசாயிகள் கொண்டு வந்தனர். இதன் எடை 5098.5 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்து 84 ஆயிரம் 636. 8 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.முதல் தரம் அதிகபட்சம் ரூ.230.50 முதல் ரூ.240.50 வரையும், இரண்டாம் தரம் குறைந்தபட்சம் ரூ.170 முதல் ரூ.221 வரையும் விற்பனையானது.

உரித்த தேங்காய் 19 மூட்டைகளை 4 விவசாயிகள் கொண்டு வந்தனர். மொத்த எடை 1038.9 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.66,184. அதிகபட்சமாக கிலோ ரூ.65-க்கும், குறைந்தபட்சம் ரூ.62-க்கும் விற்பனையானது. 5 வியாபாரிகள் பங்கேற்றனர்.மக்காச்சோளம் 369 மூட்டைகளை 8 விவசாயிகள் கொண்டு வந்தனர். இவற்றின் எடை 21,384 கிலோ. மதிப்பு ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 334. அதிகபட்சமாக கிலோ ரூ.25.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ.25.20-க்கும் விற்பனையானது. 5 வியாபாரிகள் பங்கேற்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.