திருப்பூர், ஜூலை 29: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் மத்திய, மாநில அரசு வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முப்படைகளின் போட்டித் தேர்வுகளுக்கான ஆட்சேர்ப்பு முகமைகளால் வெளியிடப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் உள்ள பொதுவான பாடங்களில் பயிற்சி வகுப்புகள் மற்றும் போட்டித் தேர்வுகள் தொடர்பான புத்தகங்களுடன் கூடிய நூலகம் நேற்று தொடங்கப்பட்டது. இதனை மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் ஜோதிமணி தொடங்கி வைத்து பேசினார்.
இதில் வேலை வாய்ப்பு அதிகாரி சுரேஷ், இளநிலை வேலை வாய்ப்பு அதிகாரி வைஷாலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக்கான இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-299152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.