திருப்பூர், ஆக. 3: திருப்பூர் மாநகரில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைகளில் கடந்த மாதம் 12.02 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டது.
திருப்பூர் மாநகரில் தென்னம்பாளையம் பகுதியில் தெற்கு உழவர் சந்தை மற்றும் புதிய பேருந்து நிலையம் பின்புறமாக வடக்கு உழவர் சந்தை என 2 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் திருப்பூர் மாநகர மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பதிவுசெய்து தினந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தினந்தோறும் அதிகாலை 2.30 மணி முதல் 8 மணி வரை விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.