தாராபுரம், ஜூலை 25: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மூலனூர், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்தவர்கள் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு பொதுமக்கள் தாராபுரம் அமராவதி ஆற்றில் இன்று தர்ப்பணம் கொடுத்தனர்.
இதற்கான பூஜைகளை நடத்திய சிவாச்சாரியார் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ‘ஆடி அமாவாசையை முன்னிட்டு தாராபுரம் அமராவதி ஆற்றில் நேற்று அதிகாலை 5 மணி முதலே சுற்றுவட்டார நகர கிராம பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமராவதி ஆற்றுக்கு நேரில் வந்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்துள்ளனர்’, என்றார்.